Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் செயலால் கடுப்பான அஜித் ரசிகர்கள்..காரணம் என்ன தெரியுமா?

ajith fans viral video about director lokesh kanagaraj

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலகட்டத்திலேயே பல வெற்றி திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171வது படத்தை இயக்க போவதாக கூறப்படும் நிலையில் அஜித்தை ட்ரோல் செய்யும் வகையில் வெளியான வீடியோ ஒன்றை லோகேஷ் கனகராஜ் லைக் செய்து இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் லோகேஷ் கனகராஜ் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த கோபம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.