தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் அறிவிப்பு படத்தின் டைட்டிலோடு வெளியானதிலிருந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட நிலையை எட்டி உள்ள நிலையில் இன்று அப்டேட் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று முதல் இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ள நிலையில் சமூக வலைதளங்கள் முழுவதும் விடாமுயற்சி பற்றிய ஹாஸ்டேக்குகள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.
