Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் செயலால் ஷாக்கான அஜித் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து மகள் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நேற்று உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.

இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ள லைக்கா நிறுவனம் வழக்கம் போல பொன்னியின் செல்வன் பட அப்டேட்டை வெளியிட்ட விவகாரம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ஒரு நாளாவது லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் அப்டேட் வெளியிடுவதை தள்ளி வைத்திருக்கலாம் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

Ajith fans about lyca productions
Ajith fans about lyca productions