தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.
இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த 62 ஆவது படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய முழு கதை திருப்தி அளிக்காத காரணத்தினால் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இப்படியான நிலையில் அஜித் இந்த படத்தின் முழு கதையை கேட்ட பிறகுதான் அறிவிப்பு வெளியிட வேண்டும் என சொல்லியுள்ளார்.
இந்த படத்தின் முழு கதையை கேட்பதற்காக பைக்கில் வெளிநாடு சுற்றுலா சென்று வந்த திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அஜித்தின் இந்த டெடிகேஷனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Ajith Decision on AK 62