தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் சோகத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து தங்களது இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
#AjithKumar sir congratulates honourable TN Opposition leader @EPSTamilNadu sir who has taken over as General Secretary of AIADMK#EdapadiPalanisamy sir condoled the death of #Ak’s father over phone. #Admk #EPS #Ajith pic.twitter.com/GLhpRsZjqw
— AK (@iam_K_A) March 30, 2023