Ajith Condition on Thala 61 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. படம் பற்றி சில நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக இந்த படத்திற்கு அஜித் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்காக அஜித் இரண்டு மாதங்கள் மட்டுமே கால்சீட் கொடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் கட்டாயமாக படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என அஜித் வினோத்திற்கு கராராக கண்டிசன் போட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் வினோத் அவர்களும் எப்படியாவது சொன்ன தேதியில் படத்தை முடித்துவிட வேண்டும் என தீயாக வேலை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததே அஜித் இப்படி ஒரு கண்டிஷன் போட காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படம் என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…