Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துபாயில் பிரமாண்டமான வீட்டை வாங்கிய அஜித்.!! வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தில் படப்பிடிப்புகள் வெகுவிரைவில் தொடங்க உள்ளன. மேலும் இந்த படத்தை சூட்டிங் துபாயில் நடக்கப் போவதாகவும் தகவல் கசிந்திருந்தது.

இப்படியான நிலையில் நடிகர் அஜித் துபாயில் பல கோடி ரூபாய் கொடுத்து பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. துபாயில் சூட்டிங் நடக்கும்போது தனது சொந்த வீட்டில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அஜித் வெளிநாடு சென்று வரும்போது எல்லாம் தனது துபாய் வீட்டில் தங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ajith bough a new luxury house update
ajith bough a new luxury house update