ajith-bhavana-video-goes-viral update
“தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.இந்நிலையில், நடிகர் அஜித் நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்டார். அதாவது, அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே பாவனா வர.. அஜித் அவரிடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித்- பாவனா ‘அசல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…