Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் அதிரடி அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.

வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக அஜித் நடிக்க போவதாகவும் தகவல் ஒன்று தீயாக பரவிய நிலையில் அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. வாடிவாசல் படத்தில் சூர்யா தான் நாயகனாக நடிக்க உள்ளார்.

அந்த படம் முடிந்த பிறகு அஜித் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாகவும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ajith and vetri maaran movie latest update
Ajith and vetri maaran movie latest update