தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Ajith Act Dual Role in Vidamuyarchi movie