Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு 2 கண்டிஷன் போட்ட அஜித்.? வெளியான மாஸ் தகவல்.!!

Ajith 62 Movie Conditions to Vignesh Shivan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை முடித்த கையோடு லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலமாக ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி போட்டு நடிக்கிறார் நடிகை நயன்தாரா.

இந்த படத்திற்காக அஜித் ரூபாய் 100 கோடி சம்பளம் கேட்ட நிலையில் லைக்கா நிறுவனம் ரூபாய் 105 கோடியாக கொடுக்க முன்வந்துள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது இந்த படத்திற்காக விக்னேஷ் சிவனுக்கு அஜித் இரண்டு முக்கிய கண்டிஷன்களை கூறியுள்ளார்.

அதாவது படத்தில் அரசியல் சார்ந்த வசனமும் அல்லது அரசியல் சார்ந்த கதாபாத்திரம் அறவே இருக்கக்கூடாது என கூறியுள்ளார். மற்றொரு கண்டிஷன் என்னவென்றால் படத்தில் கண்டிப்பாக சென்டிமென்ட் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

படத்தை குடும்பம் குடும்பமாக ரசிக்க சென்டிமென்ட் காட்சி தேவை என்பதனாலேயே அஜித் இப்படி ஒரு கண்டிஷனை கூறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 Ajith 62 Movie Conditions to Vignesh Shivan

Ajith 62 Movie Conditions to Vignesh Shivan