Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் 61 குறித்து வெளியான தகவல்.. தெறிக்கவிட்ட கொண்டாடும் ரசிகர்கள்

Ajith 61 Movie Update

வலிமை படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். வலிமை திரைப்படம், வருகிற பிப்ரவரி 24-ந் தேதி ரிலீசாக உள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 9-ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வை குறித்து இப்படத்தின் கதை இருப்பதால் அண்ணா சாலையை போன்றே அங்கு செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Ajith 61 Movie Update
Ajith 61 Movie Update