தமிழ் சினிமாவில் இயக்குனரின் மகனாக அறிமுகமாகி அதன் பின்னர் தன்னுடைய உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று பெற்ற நடிகராக இடம் பிடித்திருப்பவர் தளபதி விஜய்.
ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் இங்கு என்றால் அது விஜய்தான் என சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி அமைந்துள்ளது.
மேலும் இவரது நடிப்பில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய உறவினர் மற்றும் லலித் குமார் ஆகியோரின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப் போனது. இதனால் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தையடுத்து தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் குறித்து பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து பேசியுள்ளார்.
எனக்கு முருகதாஸ் சாரை பற்றி தெரியும். தோல்வி வந்த பிறகு அதனை சரிகட்ட அவர் எப்படி உழைப்பார் என்பது எனக்கு நன்றாக தெரியும். எனவே விஜய் 65 திரைப்படம் நிச்சயம் வெறித்தனமாக வேற லெவலில் இருக்கும் என கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம் சரியாகச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 65 படத்தை அடுத்து விஜய் மீண்டும் தளபதி 66 படத்திற்காக மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமாருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…
இயக்குநராக பல வெற்றிப் படங்களை வழங்கிய செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்…
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj