Don’t Trust Anyone in Life – Selvaraghavan’s Cryptic Post
இயக்குநராக பல வெற்றிப் படங்களை வழங்கிய செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கருத்துகளையும், பதிவுகளையும் பகிர்ந்து வரும் செல்வராகவனின் பதிவுகள் இணையத்தில் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு திடீர் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது பதிவில், “யாரையும், யாரையும், யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவு எதைப் பற்றியது என்ற கேள்வி தற்போது இணையத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக, அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தப் பதிவு அதனுடன் தொடர்புடையதா என்றும் இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.
எனினும், தனது பதிவின் பின்னணி குறித்து செல்வராகவன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது.
— selvaraghavan (@selvaraghavan) August 28, 2026
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…