Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வைரல்.

அறிமுக இயக்குனர் ரா.சவரி முத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துவாரகா புரொடக்ஷன்ஸ் (Dwarka Productions) நிறுவனம் சார்பில் பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை, திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Aishwarya Rajesh new movie update
Aishwarya Rajesh new movie update