ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரியுடன் இணைந்து மாமன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி திடீரென அவரது சமூக வலைதளங்களில் இருந்து விலகப் போவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஏற்கனவே நேற்று அனுஷ்கா ஷெட்டி சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
