aishwarya-character-changes-in-pandian-stores serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தினம் தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் கூட்டுக் குடும்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக முல்லை வேடத்தில் சித்ரா நடித்து வந்த போது ஏகபோக வரவேற்பு இருந்தது. அவருடைய இறப்புக்குப் பிறகு காவியா முல்லை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கினார்.
வெள்ளித்திரை வாய்ப்பு காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலக அதன் பிறகு தற்போது லாவண்யா இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருகிறார். இப்படி முல்லை கதாபாத்திரத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளது.
முதலில் தீபிகா ஐஸ்வர்யாவாக நடித்து வர அவர் இந்த சீரியலில் இருந்து விலக சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். சில தினங்களுக்கு முன்னர் அவரும் வெள்ளித்திரையில் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லி டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இதனால் அவருக்கும் சீரியலில் நடிக்க நேரம் இருக்காது என்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து அவரும் விலகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இனி ஐஸ்வர்யாவாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் இப்படி அடிக்கடி நடிகைகள் மாற்றப்பட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த சோதனை என கூறி வருகின்றனர்.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…