தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியாக எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தவர்களில் ஒருவர் நிக்சன்.
நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் முதல் ஆளாக ரவீனா வெளியேற்றப்பட அவரை தொடர்ந்து நிக்சன் வெளியேற்றப்பட்டார். நிக்சனின் வெளியேற்றத்தை காது குளிர கேட்டு ரசிப்பது பல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்துள்ளார் சக போட்டியாளரான ஐசுவின் அப்பா.
ஐஸ் உடன் நெருங்கி பழகி அவருடைய வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நிக்சன் என தற்போது வரை கருத்து நிலவி வரும் நிலையில் ஐசு அப்பாவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
