Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

47 ஆண்டுகளுக்கு பின்பு…பழைய நினைவுகளைப் பகிர்ந்த சூப்பர்ஸ்டார்

After 47 years...Superstar shares old memories

47 ஆண்டுகளுக்கு பின்பு…பழைய நினைவுகளைப் பகிர்ந்த சூப்பர்ஸ்டார்

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்பது உறுதியானது. இப்படம் பேமிலி ட்ராமா கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதற்கிடையில், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இன்று மறைந்த புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.

மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்களின் திருவுருவப் படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அவருக்கு மரியாதை செலுத்தினார். இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வில், ஏவிஎம் சரவணன் அவர்களின் நட்பு பற்றியும் அவரின் அறிவுரைகள் பற்றியும் ரஜினி பேசினார்.

தனது திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் ஏவிஎம் சரவணன் பல அறிவுரைகளை கூறியுள்ளார். ஒரு சிறந்த வழிகாட்டியாக எனக்கு இருந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் நடிக்கும்போது, எனக்கு அட்வைஸ் செய்தார். அந்த அட்வைஸை இன்று வரை கடைப்பிடிக்கிறேன்.

‘சிவாஜி’ திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏவி.எம். சரவணன் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏவிஎம் சரவணன், என்னிடம் வயதாக வயதாக நம்மை பிசியாக வைத்துக்கொள்ள வேண்டும், எனவே இரண்டு வருடத்திற்கு ஒரு படம் மூன்று வருடத்திற்கு ஒரு படம் என பண்ணாமல் வருடத்திற்கு ஒரு படம் பண்ணுங்கள்’ என கூறினார்.

ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்னதை கேட்டு இன்றுவரை வருடத்திற்கு ஒரு படம் பண்ணி வருகின்றேன். என ரஜினி தெரிவித்தார்.

தற்போது ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருவதற்கு ஏவிஎம் சரவணன் அவர்களும் மிக முக்கிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. ஏவிஎம் சரவணன் அவர்களின் அறிவுரைப்படி ரஜினி தொடர்ந்து குறைந்தது வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

After 47 years...Superstar shares old memories
After 47 years…Superstar shares old memories