தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வர நிகழ்ச்சியின் கடைசி எலிமினேஷனாக ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் மொத்தம் 97 நாட்கள் இருந்த ஏடிகே இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு 16,000 முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி அடிக்க மொத்தம் 97 நாட்களுக்கு 18 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெற்றதாக தெரியவந்துள்ளது. தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
