aditi-shankar-next-movie-update
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அனைவருக்கும் பரீட்சையமானார்.
முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகை அதிதி சங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
அதன்படி, நடிகை அதிதி சங்கர் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதில் கதாநாயகனாக மறைந்த பிரபல முன்னணி நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடித்து வருகிறார். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் ஏற்கெனவே நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை அதிதி சங்கர் தற்போது போர்ச்சுக்கல் செல்கிறார் என தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…