வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ” அது ஒரு பெரிய கதை ” திரைப்படம் – படம் பற்றிய முழு விவரம் இதோ!

வித்தியாசமான கதைக்களத்தில் தமிழ் சினிமாவில் ” அது ஒரு பெரிய கதை ” என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் மூலமாக தான் தரமான இயக்குனர்கள் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் மோகன்குமார் ஒளிப்பதிவில் ராம்பிரசாத் நாச்சிமுத்து என்பவரின் இசையில் உருவாக உள்ள திரைப்படம் தான் ” அது ஒரு பெரிய கதை “.

இந்த படத்தில் நாயகனாக டே & நைட் படத்தின் மூலம் பிரபலமான ஆதர்ஷ் என்பவர் நடிக்க உள்ளார். மேலும் இவருடன் இணைந்து அறிமுக நடிகர் நடிகைகளான அஸ்வந்த் மற்றும் மோனிகா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

UCC Unique Cine Creations, Advik Visuals Media and India’s Elite Media ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளன. ஏவிஎஸ் பிரேம் என்பவர் இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

டேன்ஞர் மணி என்பவர் சண்டைக் காட்சிகளை படமாக்க உள்ளார். N டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்திற்கு டிசைன் மற்றும் VFX பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த படத்தின் பூஜை திருப்பூரில் பிரபல கோவிலில் நடை பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தில் படத்தின் சூட்டிங் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் pre-production வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

admin

Recent Posts

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

9 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

14 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

14 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

14 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

15 hours ago

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…

15 hours ago