Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குருதி ஆட்டம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்ட பட குழு

adharva-movie-trailer release update

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அதர்வா. இவர் தற்போது ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குனரான ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இதில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இப்படம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படம் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

adharva-movie-trailer release update
adharva-movie-trailer release update