தமிழ் சினிமாவில் சென்னை 28 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயலட்சுமி. சின்னத்திரையிலும் நடித்து வந்த இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார். தற்போது குழந்தை குடும்பம் என இருந்து வரும் இதே விஜயலட்சுமி தனக்கு நேர்த்த பாலியல் தொந்தரவு குறித்து பதிவு செய்துள்ளார்.
கராத்தே கற்க சென்றபோது அந்த ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிகைகள் சில தாமாக முன்வந்து இயக்குனர் தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசுவதால் பிறகு எல்லா நடிகைகளிடமும் இதை எதிர்பார்க்கிறார்கள். இதில் விருப்பமில்லாத நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சூழ்நிலையை உருவாக்குவது அறமாக பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ள இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
