Actress varalaxmi about-radhika
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். நாயகி, வில்லி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை துணிச்சலாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருக்கு சரத்குமாரின் இரண்டாவது மனைவியான ராதிகாவுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்து வருகிறது.
தன்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவியாக இருந்தாலும் வரலட்சுமி சரத்குமார் அவரை அம்மா என அழைக்காமல் ஆண்ட்டி என்று தான் அழைத்து வருகிறார். இந்த நிலையில் இது குறித்து பலரும் பலவிதமாக பேசி வர இந்த விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் வரலட்சுமி.
நான் எதற்கு ராதிகாவை அம்மா என அழைக்கவேண்டும் அவங்க என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி அவ்வளவுதான். என் அப்பாவின் மீது என்ன மதிப்பு இருக்கும் அதே மதிப்பு அவர்கள் மீதும் இருக்கிறது. என்னுடைய அப்பாவும் அவருடைய கடமையை சரியாக செய்து வருகிறார். பேசுபவர்கள் ஆயிரம் பேசுவார்கள் அது எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. எல்லோருக்கும் ஒரே அம்மா தான் இருக்க முடியும் எனக்கு ஒரே அம்மாதான். ஆகையால் ராதிகாவை அம்மா என அழைக்க முடியாது ஆன்ட்டி என்று தான் அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.
இவர் போல்டாக அளித்துள்ள இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…