Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வனிதாவின் மகனுக்கு ரசிகர் வைத்த கோரிக்கை. என்ன தெரியுமா?

actress-vanitha-vijayakumar-son-about-her fan

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் தோல்வியில் முடிவடைந்தது. வேலன் வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி அவருடைய அப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் எப்போதும் தன்னுடைய அம்மாவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருந்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் போட்டிங் சென்ற போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்து ரசிகர் ஒருவர் உங்க அம்மா கிட்ட பேசுப்பா அவங்க பாவம்ல, என் அம்மாவின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லியுள்ளார். மேலும் நான் உன்னை என்னுடைய தம்பியா நினைச்சு தான் இத சொல்றேன் என அவர் நீளமான கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஆனால் அம்மா குறித்து பதிவு செய்த இந்த கமெண்ட்டுக்கு வனிதா மகன் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. மேலும் இவர் காலரை தூக்கியபடி ஒரு போட்டோவை வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படியே அருண் விஜய் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.