தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி சீரியலிலும் நடித்து இருந்த இவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்தும் விலகி இருந்தார்.
சமீபத்தில் இவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் பிரக்னன்சி போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து வைஷாலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வரும் வைஷாலிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
