actress trisha speak about our marriage life update
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் வரும் டிசம்பர் 13ஆம் தேதியுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். தற்போது வரை அதே இளமை தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வரும் த்ரிஷா சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வந்தார்.
அதிலும் இப்படத்திற்கான ப்ரோமோஷனில் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிக அளவில் ஆக்கிரமித்து இருந்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது திருமணம் குறித்த கேள்விக்கு ஊடகங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே நடிகை த்ரிஷா கடந்த 2015 ஆம் ஆண்டு வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் எதிர்பாராதவிதமாக திருமணம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த த்ரிஷா தற்போது ஊடகங்களிடம் இதுகுறித்து பேசியதாவது, “என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்டால் என்னால் கூட பதில் சொல்ல இயலாது. யாருடன் இருக்கிறேன், யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து அமையும். ஒருவருடன் பழகும்போது இவருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்று தோன்ற வேண்டும். விவாகரத்துகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்த சில பேர் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இல்லை. அது போன்ற திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று விளக்கமளித்துள்ளார்”.
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…
Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…
Aaryan Trailer Tamil | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…