actress trisha post about success of vtk movie
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கவுள்ளது.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரையரங்கில் மாபெரும் வசூல் சாதனையை படைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் பல திரை பிரபலங்களும் இப்படத்தின் படக்குழுவினருக்கு தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை திரிஷாவும் தனது சமூக வலைத்தளத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் தனது விருப்பத்திற்கு உரியவர்களான சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்களின் கூட்டணியே என்றும் இந்த கூட்டணி எப்போதும் வெற்றி பெறும்’ என்றும் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் இக்கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்திருப்பதும் அப்பாடமும் மாபெரும் வெற்றியை அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…