சினிமாவை விட்டு த்ரிஷா விலகுவதாக வந்த தகவல் குறித்து பேசி உள்ளார் அவரின் அம்மா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம்.
சமீபத்தில் திரிஷா சினிமாவை விட்டு விலகி அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது அம்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது திரிஷா அரசியலுக்கு எல்லாம் வரப்போவதில்லை என்றும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் இது தொடர்பாக வரும் தகவல் எதுவும் உண்மை கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் இதுவரை பரவிய தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
