மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படி பிசியாக பல படங்களில் நடித்து வரும் திரிஷா 40 வயதை எட்டியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு திருமணம் என சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகிறது. சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளரை திரிஷா திருமணம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை திரிஷா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “உங்களை பற்றியும் உங்கள் அணியை பற்றியும் உங்களுக்கே தெரியும். அமைதியாக இருங்கள், வதந்திகளை பரப்பாதீர்கள். வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். திருமண வதந்திகளை பரப்பியவர்களுக்கு திரிஷா பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”,
“KEEP CALM AND STOP RUMOURING”
CHEERS!— Trish (@trishtrashers) September 21, 2023