தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினருடன் இணைந்து தீவிரம் காட்டி வரும் இவர் நேற்றைய தினம் கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்நிகழ்ச்சியில் அழகிய உடையில் தேவதை போல் இருந்த த்ரிஷாவின் புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.
Ever Gorgeous South Queen Trisha#TrishaKrishnan @trishtrashers #Trisha #KollywoodCinima #PS2 pic.twitter.com/Z4opMgwU1G
— Kollywood Cinima (@KollywoodCinima) April 16, 2023