தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகள் என படு பிரமாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ராகுல் தாத்தா மற்றும் மனோபாலா என இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்ததாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக தேஜஸ்வினி என்பவர் பங்கேற்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவ அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்படியான நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இது குறித்து கேட்க அதற்கு விளக்கம் அளித்துள்ளார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவே மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் அதற்கான காரணம் என்னவென்றால் எனக்கு சமைக்கவே தெரியாது என தெரிவித்துள்ளார்.
இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தேஜஸ்வினியை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
