தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு தற்போது இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் லஸ்ட் ஸ்டோரியில் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் புத்தாண்டு தினத்தில் அவருடன் லிப் கிஸ் கொடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகின.
இதை தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக வெளியான தகவலுக்கு தமன்னா மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.
ஒருவருடன் சேர்ந்து நடித்தால் காதல் வந்து விடாது, இதுவரை பலருடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் விஜய் வர்மாவிடம் ஏதோ தனிப்பட்ட விஷயம் பிடித்துள்ளது, அவர் எனக்கானவர் என தெரிவித்துள்ளார்.
எனக்காக அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தால் அவருக்காக நானும் என் கட்டுபாடுகளை தளர்த்தி கொள்வேன் என தெரிவித்துள்ளார். என் மீது மிகுந்த அக்கறையாக இருக்கிறார். அவரை என்னுடைய உலகமாக பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.


