Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தவறான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து தமன்னா கொடுத்த பதில் வைரல்

actress tamannaah stop the misinformation news viral update

தென்னிந்திய சினிமாவில் டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை தமன்னா தன்னை பற்றி வெளியான தவறான செய்தி ஒன்றுக்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை தமன்னா 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் ஒன்று வேகமாக பரவி வந்தது.

இது குறித்து நடிகை தமன்னா, ‘நான் நடிகர் பாலகிருஷ்ணா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இது போன்ற தவறான கருத்துக்களை யாரும் பரப்ப வேண்டாம். இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்’ என்று வருத்தத்துடன் விளக்கம் அளித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.