பிரபல தென்னிந்திய நடிகையான தமன்னா தற்போது “பாப்லி பவுன்சர்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதுர் பண்டார்கரின் என்பவர் இயக்க ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஜங்கிலீ பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இதில் லேடி பவுன்சராக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படம் வட இந்தியாவின் உண்மையான ‘பவுன்சர் நகரமான அசோலா ஃபதேபூரில்’ அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.
அதில் இப்படம் இந்த ஆண்டு நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரின் வரும் செப்டம்பர் 23-ம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்போ ஸ்டாரில் லேடி பவுன்சராக இருக்கும் தமன்னாவின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
