மலேசியாவில் ALM சீரிஸ் கார் ரேஸில் ரேஸர் அஜித்குமாரை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்ட நடிகை ஸ்ரீலீலா!
அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வரும் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அப்போது அங்கு நடிகை ஸ்ரீலீலாவும் இருந்துள்ளார். அவர் அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் ஸ்ரீலீலா AK64 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா? இல்லை வேறேதும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது அறிவிக்கப்படவில்லை. அதேபோல், லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில், மலேசியாவில் அஜித் குமாரை சந்தித்த ஸ்ரீ லீலா அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
பொங்கலுக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஸ்ரீலீலா நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் AK64 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கும் என கூறியிருந்தார் ஆதிக். அவ்வகையில், பொங்கல் பண்டிகையில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பதால், அடுத்தாண்டு கோடைவிடுமுறையில் AK64 படம் வெளியாக வாய்ப்பில்லை. ஒருவேளை தீபாவளிக்கு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.


