Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன்னி லியோனை தொடர்ந்து ஒய் சேலஞ்சை முடித்த ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் வீடியோ

Actress shruti-hassan-new-challenge

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ட்ரெண்டிங் ஆகிவரும் ஒய் என்ற சேலஞ்சை வெற்றிகரமாக செய்த அசத்தியுள்ளார்.

அதாவது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதேனும் ஒரு புதிய சேலஞ்சை திரைபிரபலங்கள் செய்து ட்ரெண்டிங் ஆகி வருவார்கள். அதேபோல் தற்போது ஒய் என்ற சேலஞ் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சுவற்றில் ஒரு காலை வைத்து தலைகீழாக மற்றொரு காலை நீட்டி ஒய் போன்ற வடிவத்தை கொண்டு வருவது தான் இந்த சேலஞ்ச். இந்த சேலஞ்ச் இந்திய திரையுலகினர் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அண்மையில் இந்த சவாலை சூப்பராக செய்த பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனின் வீடியோ வைரலானது. அதேபோல் தற்போது ஸ்ருதிஹாசன் இந்த சேலஞ்சை அசால்டாக செய்திருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)