Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

actress shilpa-shetty-hot-photo

பாலிவுட் திரை உலகில் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர். ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜயின் குஷி திரைப்படத்தில் பேக்கரினா என்னும் பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருந்த இவர் பாலிவுட்டில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2009ல் ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஷில்பா ஷெட்டிக்கு தற்போது 48 வயது ஆகியுள்ளது. இந்த நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது இத்தாலியில் இருக்கும் வெப்ப நீரூற்றில் நீச்சல் உடையில் குளித்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதனை கண்டு ஷாக்கான ரசிகர்கள் 48 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து அப்புகைப்படத்திற்கு லைக் செய்து வருகின்றனர்.