தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு நாயகி தொடங்கியவர் ஷாலினி. அமர்க்களம் படத்தின் மூலமாக அஜித்துடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை வாழ்ந்து வருகிறார்.
படங்களில் நடிக்காமல் குடும்பத்தை கவனித்து வரும் ஷாலினி சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய தங்கை ஷாமிலியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.
பிங்க் நிற பட்டு புடவையில் அழகாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
View this post on Instagram