Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகை. இயக்குனர் கொடுத்த தகவல்

Actress sayeesha in pathu thala movie

இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், ‘பத்து தல’ திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவி நடிகை சாய்ஷா ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் ‘வனமகன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘காப்பான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress sayeesha in pathu thala movie
Actress sayeesha in pathu thala movie