Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எங்கள் வாழ்க்கையில் மதம் ஒரு தடையாகவே இருந்ததில்லை.. சரண்யா பொன்வண்ணன்.!!

actress saranya ponvannan latest speech

சரண்யா பொன்வண்ணன் லேட்டஸ்ட் ஸ்பீச் வெளியாகி உள்ளது.

நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நாயகியாக பிரபலமானதை விட ஹீரோக்களின் அம்மாவாக பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

இவர் பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கணவர் குறித்தும் மதம் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

அதாவது எங்களுக்கு திருமணம் ஆகி 29 வருடங்கள் ஆகி இருக்கு ஆனா எங்கள் வாழ்க்கையில் மதம் ஒரு தடையாகவே இருந்ததில்லை என கூறியுள்ளார் என் கணவர் இந்து நான் கத்தோலிக் கிறிஸ்தவர் எங்களை பொறுத்தவரையில் எல்லா கடவுளும் ஒன்றுதான் எனக் கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் நாங்கள் சர்ச் போவோம்,கோவில் போவோம் ஏன் மசூதிக்கு கூட போவோம் எங்க வீட்ல இருக்கிற ஏசு போட்டோவையே என் கணவர் தான் வரைந்தாரு என்று பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress saranya ponvannan latest speech

actress saranya ponvannan latest speech