Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரருடன் சாரா அலிகான்..வைரலாகும் புகைப்படம்

Actress sara-alikhan-date-with-famous-cricketer

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சாரா அலிகான். இவர் பிரபல நடிகர் சைஃப் அலி கானின் மகள் ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அப்படத்தை தொடர்ந்து சிம்பா, லவ் ஆஜ் கல், அத்ராங்கி ரே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அதிலும் இவர் நடித்த அத்ராங்கி ரே திரைப்படத்தில் நடிகர் தனுஷும் நடித்திருந்ததால் இப்படம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் நடிகை சாரா அலிகான் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது ஒரு சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சாரா அலிகான் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் ஃபோட்டோ இணையத்தில் பயங்கரமாக பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் டேட்டிங் செய்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி வருவதோடு இப்புகைப்படத்தையும் வைரலாக்கி வருகின்றனர்.

 Actress sara-alikhan-date-with-famous-cricketer

Actress sara-alikhan-date-with-famous-cricketer