இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருக்க சிலரின் பெயர் போதை பொருள் குற்றத்திலும் அடிபட்டது.
முக்கிய நடிகையின் தங்கையான சஞ்சனா கல்ராணி மீது எழுந்த புகார் அடிப்படையில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரின் தாயார் சஞ்சனாவுக்கு ஏற்கனவே டாக்டர் அஜீஸ் பாஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. ஏப்ரலில் திருமணம் செய்வதாக இருந்த நிலையில் கொரோனாவால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது என கூறியிருந்தார்.
அதே வேளையில் அஜீஸ்ம் திருமணம் நடைபெற்றதாகவே கூறியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சஞ்சனா கல்ராணி மணக்கோலத்தில் இருப்பது போல புகைப்படங்கள் பரவ இதற்கு அவர் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.