தமிழ் சினிமாவில் நிறைய மாதம் நிலவே என்ற வெப் சீரிஸ் தொடர்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் நடித்த நிலையில் அதில் தனக்கு ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான ஓரிரு மாதத்தில் இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டியர் ஹேட்டர்ஸ் நினைத்தது நடந்து விட்டது என சந்தோஷப்படலாம். ஆனால் இனிமேல் தான் என்னுடைய வாழ்க்கை தொடங்க போகிறது. நீங்கள் எதிர்பாராத அளவிற்கு என்னுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கப் போகிறது. அதை தாங்கிக் கொள்ளும் மனநிலையை கொடுங்கள் என கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
அதோடு ஒரு பெண்ணை தோற்கடிக்க முடியாத சமயத்தில் அவளது நடத்தையை குறித்து விமர்சிப்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என Fake Love என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
இதனால் விஷ்ணுகாந்த் சம்யுக்தா இடையேயான பிரிவு உண்மை தானோ என ரசிகர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
