மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?:கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில்

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் \”யே மாயா சேஸவே\” (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா (Akkineni Naga Chaitanya). சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் \”அக்கினேனி\” எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார்.

இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனைப்புடன் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சமந்தா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவரது அதிகாரபூர்வ கணக்கில் \”என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்\” (Ask Me Anything) எனும் அமர்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது ஒரு பயனர் அவரிடம், \”மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?\” என கேட்டார்.அதற்கு சமந்தா, \”அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன\” என பதிலளித்தார்.

அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார்.சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”,

actress samanthas-reply-to-million-dollar-question
jothika lakshu

Recent Posts

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

11 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

11 hours ago

Coffee Day Kadhal Video Song

Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…

11 hours ago

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

16 hours ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

16 hours ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

16 hours ago