Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகையின் தயாரிப்பில் நடிக்கும் சமந்தா..வெளியான சூப்பர் தகவல்

Actress samantha-was-join-to-famous-actress-production

பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்த படம் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து சமந்தா பிசியாக பல படங்களில் கமிட் ஆகியதோடு மட்டுமின்றி சில வெப் சீரிஸ் மற்றும் விளம்பரங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து பிரபல நடிகையாக திகழும் டாப்ஸி தற்போது ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதை சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். அதில் அடுத்த தயாரிக்க இருக்கும் படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

Actress samantha-was-join-to-famous-actress-production
Actress samantha-was-join-to-famous-actress-production