தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்ததை தொடர்ந்து அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் புராண கால காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தேவ் மோகன் நாயகனாக நடிக்க நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்திருக்கும் சமந்தாவின் மல்லிகா கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அப்புகைப்படங்களில் சிலை போல் அழகாய் இருக்கும் சமந்தாவின் லுக்கை ரசிகர்கள் வர்ணித்து அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
Gorgeous #SamanthaRuthPrabhu
From #Shaakuntalam #Mallika ????@Samanthaprabhu2 #Samantha pic.twitter.com/RAhBABTgsV— Suresh Kondi (@SureshKondi_) January 18, 2023