Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமந்தா நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

Actress samantha-new-movie-details

டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் சமந்தா தற்போது “யசோதா” என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகுந்த் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். மணி ஷர்மா இசையமைக்கும் இப்படம் ஐந்து மொழிகளில் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் உரையாடல் இடம் பெறும் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழு அறிவித்துள்ளது. இனி மான்டேஜ் என்று சொல்லப்படும் உரையாடல் இல்லாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. என்ற புதிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களின் இடையே அதிகப்படுத்தியுள்ளது.

Actress samantha-new-movie-details
Actress samantha-new-movie-details