Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நம்பிக்கையே உங்களை வழிநடத்திச் செல்லும்..! சமந்தா வெளியிட்ட பதிவு

actress-samantha-motivational-post

இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது மயோசைட்டிஸ் நோயிலிருந்து மீண்டு வரும் சமந்தா பழையபடி உத்வேகமாக தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது சிட்டாடல் என்னும் வெத்தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோட்டிவேஷனல் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.

அதன்படி அதில், சமந்தா அவரது வீட்டில் உள்ள லிங்க பைரவியை வழிபாடு செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு, “சில சமயங்களில் சூப்பர்ஹியூமன் சக்தி எல்லாம் தேவையில்லை. நம்பிக்கையே உங்களை வழிநடத்தி செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும். நம்பிக்கை உங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியராகவும், நண்பராகவும் மாறும். நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும்” என குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.